தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடுகளால், அனைத்து நேரடி பரப்புரை நிகழ்ச்சிகளையும் மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ரத்து செய்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களில் 500 பேருக்கு மேல் கூடவும், சாலையில் பரப்புரை பேரணி, வாகனப் பேரணி நடத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தேர்தல் ஆணையம் பிறப்பித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை, அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் பின்பற்றாததால் தான், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புதிய கட்டுப்பாடுகள், நேற்றிரவு 7 மணி முதல் அமலுக்கு வந்தன. தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, தான் ஏற்கனவே திட்டமிட்டிருந்த அனைத்து தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். எனினும், காணொலி முறையில் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.