இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை!

இந்தியாவில் இருந்து துபாய் மற்றும் கனடாவுக்கு விமானங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகள் விமான போக்குவரத்துக்கு…

இந்தியாவில் இருந்து துபாய் மற்றும் கனடாவுக்கு விமானங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகள் விமான போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ளன.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த 10 நாட்களுக்கு, இந்தியாவில் இருந்து, துபாய் வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, துபாய் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போல, இந்தியா வழியாக துபாய் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய் குடியுரிமை பெற்றவர்கள், அரசுமுறை பயணமாக வருபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், துபாயில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் வழக்கம் போல வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு கனடாவும் தடை விதித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.