கேரளாவில் கல்வி முறை சரியில்லை – ஆளுநர் ஆரிப் கான் கருத்து

கேரளாவில் 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினா செய்யாத நிலையில், ஏன் என அடுத்த மாதம் 3-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என ஆளுநர் ஆரிப் கான் மீண்டும் கெடு விடுத்துள்ளார்.   கேரளாவில் 9…

கேரளாவில் 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினா செய்யாத நிலையில், ஏன் என அடுத்த மாதம் 3-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என ஆளுநர் ஆரிப் கான் மீண்டும் கெடு விடுத்துள்ளார்.

 

கேரளாவில் 9 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இன்று ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆரிப் கான் கெடு விடுத்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி இன்று காலை 11.30 மணிக்குள் ராஜினாமா கடிதம் தன்னிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆளுநரின் பேச்சை கேட்க வேண்டாம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும், சம்மந்தப்பட்ட துணை வேந்தர்களும் ராஜினாமா கடிதத்தை வழங்கவில்லை.

 

இதனால், கேரளாவில் மீண்டும் ஆளுநருக்கும் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையே மோதல் போக்கு உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆளுநர் ஆரிப் கான், துணை வேந்தர்கள் இன்று ஏன் ராஜினாமா செய்யவில்லை என நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த மாதம் 3-ம் தேதிக்குள் துணை வேந்தர்கள் ராஜ் பவனில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

கேரளாவில் கல்வி முறை சரியில்லை என்பது தான் தன் கருத்து. திறமையானவர்கள் கேரளாவில் இருக்க விரும்பவில்லை. அவர்கள் வெளியேற முயற்சிக்கின்றனர்.
இது கேரளாவின் பிரச்னை. திறமையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, அறியாதவர்கள் ஆள்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். கேரளாவில் துணை வேந்தர்கள் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றாதது தான் பிரச்சனை. இதை உச்ச நீதிமன்றமும் சுட்டி காட்டி உள்ளன.

 

ஒன்பது பல்கலைக்கழகங்கள் மட்டும் இன்றி மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னணியில் இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இந்த விசயத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும், துணைவேந்தர்களுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.