பட்டாசு வெடிச்சது குத்தமா?… இப்படி ஆயிருச்சே!

சென்னையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது, அதிலிருந்து சிதறிய தீப்பொறிகள் பட்டதில், ஐந்து இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமானது. சென்னை ராய்ஸ் ரோடு, அவ்வை சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில், தீபாவளியை முன்னிட்டு…

சென்னையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது, அதிலிருந்து சிதறிய தீப்பொறிகள் பட்டதில், ஐந்து இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமானது.

சென்னை ராய்ஸ் ரோடு, அவ்வை சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில், தீபாவளியை முன்னிட்டு இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பட்டாசில் இருந்து சிதறிய தீப்பொறிகள், வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பட்டது. இதனால் ஒன்றன்பின் ஒன்றாக அங்கிருந்த ஐந்து இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சரியான நேரத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்து, தீயை அணைத்ததால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் தாமரைச் செல்வன், பகிர், ராஜேஷ், சையத், ஜேசுராஜ் ஆகிய ஐந்து பேரின் இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகின. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.