காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தமிழ் நாடு வந்துள்ளார். கர்நாடகாவில் இருந்து ஹெலிகப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு வந்த ராகுல் காந்தி, கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்த மாணவர்கள் மத்தியிலும் அவர் உரையாற்றினார். அவர் பேசியது :
தகவல் தொழில்நுட்பத் துறையில் அன்றாட புரட்சி ஏற்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றி வருகிறது. மாணவர்கள் தாங்கள் பயின்ற அறிவுத்திறனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பள்ளியில் கல்வி பயில சிறந்த சுற்றுச்சூழல் அவசியப்படுகிறது. வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்ட ஒருவருக்கு ஒருவர் மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். 20 ஆண்டுகள் எனது அரசியல் பயணத்தில் நான் அறிந்து கொள்வது பிறரை மதித்து நடப்பது. நான் இங்குள்ளவர்களை நீங்கள் என்னவாக வேண்டும் என கேட்டபோது ஒருவரும் நான் அரசியல்வாதியாக வேண்டும் என்று கூறவில்லை.
அரசியல்வாதியாக இருந்தாலும், மாணவராக இருந்தாலும் ஆசிரியராக இருந்தாலும் பணிவு அடிப்படையானது. எந்த துறையில் சிறந்து விளங்கினாலும் பணிவு என்பது அவசியம்.
நாட்டில் கல்வி ஒருபோதும் தனியார் மயமாகக் கூடாது. தரமான கல்வியை அளிக்க வேண்டும் அதற்கான நிதியை ஒதுக்கிடு செய்ய வேண்டும். நாட்டில் கல்வி மட்டுமல்ல அதற்கான வேலை வாய்ப்பையும் உருவாக்க வேண்டும். ஐடி துறை பாதிக்கப்பட்டு வருகிறது. அதனை பாதுகாக்க வேண்டும்.







