தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன்.
ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கபட்ட ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது விஜயின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் ஜனநாயகன் திரைப்படம் விலகியதை தொடர்ந்து புது படங்கள் சில பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா ஆகியோர் நடித்து 2025 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த தெறி திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15 ஆம் ஆண்டு ரீரிலீசாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக வெளியாக உள்ள திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையின் படி தெறி படத்தின் மறுவெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுவதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
As per the request from the producers of upcoming releases, we have decided to postpone the release of “Theri”.
— Kalaippuli S Thanu (@theVcreations) January 13, 2026







