போர் பதற்றம் : குவைத்தில் விசா காலம் நீட்டிப்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

போர் பதற்றம் காரணமாக குவைத்தில் விசா காலாவதியை நீட்டிப்பு செய்து குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக 2026 பிப்ரவரி 28 தேதி முதல் காலாவதியான மற்றும் காலாவதியாக உள்ள அனைத்து வகையான சுற்றுலா விசாக்களை 1 மாதம் காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விசா நீட்டிப்பு செய்வததற்காக சம்பந்தப்பட்ட நபர்கள் எந்தவொரு அலுவலகத்துக்கும், நேரடியாக செல்ல வேண்டியதில்லை. மேலும், அபராதங்களும், கட்டணங்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விடுமுறை உள்ளிட்ட பல காரணங்களுக்காக குவைத்திற்கு வெளியே சென்று தற்போதைய சூழ்நிலையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் அனுமதிக்கப்பட்டிருந்த காலம் முடிந்தாலும் திரும்ப வர முடியாதவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு காலாவதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கத்தார் மற்றும் அமீரகம் உள்ளிட்ட வ‌ளைகுடா நாடுகளும் இதே அறிவிப்பை கடந்த தினங்களில் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.