10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் மோதுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 12-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் மோதிய தில் இந்தியா 3-2 என்று முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.







