கல்வி வியாபாரம் ஆகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற…

கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு அனைத்து பெண்களுக்கும் உரிய மரியாதை, அங்கீகாரம் அளிக்கப்படும் எனக் கூறினார். ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் இரண்டும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் எனக் கூறிய ராகுல் காந்தி, தற்போது கல்வி வியாபாரமாகிவிட்டதாகக் கூறினார்.

மேலும் மத்திய அரசிடம் கல்வித்துறைக்கான முழு அதிகாரம் இருப்பதே கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். தான் எப்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசவாய் திறக்கிறாரோ அப்போதெல்லாம் மைக் ஆஃப் செய்யப்படுகிறது எனக் கூறிய ராகுல் காந்தி, 70 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிசாஷையே திருப்பிய அனுப்பிய இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பெரிய விஷயம் இல்லை எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.