புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து ராஜினாமா!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகக்கோரி சிவக்கொழுந்து, தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அனுப்பி வைத்தார். புதுச்சேரியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினமா செய்ததால், காங்கிரஸ் தலைமையிலான அரசு…

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகக்கோரி சிவக்கொழுந்து, தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அனுப்பி வைத்தார்.

புதுச்சேரியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினமா செய்ததால், காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இந்நிலையில், காரைக்காலில் தேர்தல் பரப்புரைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இவர்கள் இருவருடன் சட்டப்பேரவைத் தலைவர் சிவகொழுந்துவின் சகோதர் ராமலிங்கம் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் சிவகொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலருக்கும், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அனுப்பி வைத்துள்ளார். லாஸ்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சிவகொழுந்து தற்போது சபாநாயகராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.