சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கடந்த 17ஆம் தேதி முதல் விருப்பமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். கடைசி நாளான இன்று, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அவர் விருப்ப மனுவை அளித்தார். 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகள் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.







