“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிப்பது இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிப்பது இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச அனுமதிப்பது இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.