“40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி!” – டிடிவி தினகரன்

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவருவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.  தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய…

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவருவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி என டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளரும்,  பாஜக கூட்டணியின் தேனி தொகுதியின் வேட்பாளருமான டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.

அப்போது டிடிவி தினகரன் பேசியபோது:

அதிமுகவை சுற்றி ஆணிவேர்கள் யாரும் இல்லை,  சில போலியான வேர்கள்தான் உள்ளது.
யார் ஆணிவேர் என்பதை காலம் பதில் சொல்லும்.  சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி படி மகளிர் உரிமை தொகை 50 சதவீத பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.  இதில் சிலிண்டருக்கு 100 ரூபாய் விலையை குறைப்பேன் என கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.  தற்போது நாடாளுமன்ற தேர்தலின் போது மறுபடியும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்தியா முழுவதும் ஏமாற்ற பார்க்கிறார்.  திமுகவினர் திருந்தவே மாட்டார்கள் என்பதை பறை சாற்றிக் கொள்கிறார்கள்.  திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளன.

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவருவது
இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி.  தமிழ்நாட்டில் திமுகவை ஆட்சி அதிகாரத்தை விட்டு இறக்கவும்,  எடப்பாடி பழனிச்சாமியை ஒழிப்பதற்காகவும்,  நலன் சார்ந்து அமமுக கட்சி மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.  ஆர்.பி.உதயகுமார் பேசுவதற்கெல்லாம் பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி குக்கர் சின்னத்தில் அதிக
வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.