வைரலாகும் ஆவேஷம் படத்தின் ‘இலுமினாட்டி’ பாடல்!

நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ஆவேஷம் படத்தின் ‘இலுமினாட்டி’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலையாள சினிமா துறையில் கதாநாயகன் என்பதை தாண்டி பல்வேறு குணச்சித்திர வேடங்கள் ஏற்று தனது…

நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ஆவேஷம் படத்தின் ‘இலுமினாட்டி’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மலையாள சினிமா துறையில் கதாநாயகன் என்பதை தாண்டி பல்வேறு குணச்சித்திர வேடங்கள் ஏற்று தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை வென்றவர் ஃபகத் ஃபாசில்.  மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்,  தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் ஃபகத்சிறந்த கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஃபகத் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

ஜித்து மாதவன் இயக்கத்தில் பாசிலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆவேஷம். இப்படத்தில் மன்சூர் அலிகான்,  ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்தை ஃபஹத் ஃபாசில் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் ‘இலுமினாட்டி’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடந்த ஆண்டு  ஜித்து மாதவன் மலையாளத்தில் வெளிவந்த படம் ரோமன்சம்.  இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் வரும் ‘கயீர்’ என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தியே இந்த ஆவேஷம் படம் அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.