திமுக ஆட்சி காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
பணகுடி பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் மகிழ்ச்சியே அதிமுக அரசின் சாதனை எனக் கூறினார். திமுக ஆட்சி காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவாலும் விடுத்தார்.







