கொரோனா தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்

தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை விரைவாகக் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.…

தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை விரைவாகக் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தடுப்பூசி தயாருக்கும் நிறுவனத்திடமிருந்து தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை விரைவாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தடுப்பூசியின் விலை தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் விலையைக் குறைக்கப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.