தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசி வருகிறார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின் வெட்டு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அனைத்திற்கும் கடந்த திமுக அரசு தான் காரணம் என்று கூறினார்.
மேலும் அவர் 10 மாதங்களாக சட்டம்-ஒழுங்கு டிஜிபியே இல்லை என்றும் தவெக அரசு தான் டிஜிபியை நியமித்தது என்றும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலித்தனர் என்று கூறினார்.
முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு பதிலளிக்க வாய்ப்பு வேண்டும் என்று கூறி திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் தனது உரையை முடித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அவைத் தலைவர் தெரிவித்தார். எனினும் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து முதலமைச்சர் விஜய், திமுகவை விமர்சித்தார். இதனை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.




