முக்கியச் செய்திகள் தமிழகம்

புதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!

புதியக் கல்விக் கொள்கை தமிழ் மொழியில் வெளியிடப்படாததற்குத் தொடர் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு வரையறை செய்யப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரகம் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இது நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டது. இந்நிலையில் புதிய தேசியக் கல்விக்கொள்கையை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட முடிவு செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் குஜராத்தி, கன்னடம், அசாமி உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய கல்விக் கொள்கையானது மொழி பெயர்ந்து வெளியிடப்பட்டது. ஆனால் தமிழில் மட்டும் வெளியாகவில்லை. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது புதிய கல்விக்கொள்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் மதுபான கடைகள் இயங்க தடை!

EZHILARASAN D

கல்லூரி மாணவியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Saravana

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு

Arivazhagan Chinnasamy