மக்கள் பணி செய்யும் அளவிற்கு மக்கள் பணத்தை திருட தெரியாது – முதலமைச்சர் விஜய்…!

மக்கள் பணி செய்யும் அளவிற்கு மக்கள் பணத்தை திருட தெரியாது என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது:

மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றி

17-வது சட்டப்பேரவைக்கு சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்பிய, என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள். பதிலுரை அளிக்க வாய்ப்பு அளித்த சபாநாயகருக்கு நன்றி.இந்த சட்டப் பேரவைக்கு 12 கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் பணி செய்வதுதான் நம்முடைய நோக்கம்.மக்களால் அங்கேரிக்கப்பட்டு நாம் எல்லோரும் சட்டமன்றத்திற்கு வந்துள்ளோம். நாம் கருத்தால் வேறுபட்டாலும் மக்கள் சேவையில் தொடர்ந்து இருக்க வேண்டும். எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி தலைவர் என்று நிரூபிக்க முடியும் என்று பேசிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. பெரம்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். திருச்சி கிழக்கு மக்களுக்கும் நன்றிகள்

விஜய் மக்கள் இயக்கம்

நாம் ஏதோ ஷூட்டிங்ளிருந்து நேரடியாக அரசியலுக்கு வந்தது போல் பலர் தெரிவித்து வருகிறார்கள். அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது. என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாட்டு மக்களின் அன்பும் அரவணைப்பும் தான் காரணம். ஒவ்வொரு குடிமக்களும் தங்களுடைய வீட்டு நபர்களாக நினைப்பதுதான் கடவுள் தந்த வரம். கடவுளுக்கும் கடவுளுக்கு சொந்தமான மக்களுக்கும் நன்றிகள்

விஜய் மக்கள் இயக்கம் தொடங்கியதில் இருந்து தங்களுடைய பணிகள் தொடங்கியது. வெள்ள நிவாரணத்தில் துணையாக இருந்தும் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி, காலை உணவு திட்டம் குருதிக்கொடை வழங்குதல் இப்படி பல வழியில் மக்களுக்கு உறுதுணையாக இருந்தோம்.

நம்முடைய திரைப்படங்களில் நம்மளால் முடிந்த ஊழல் எதிர்ப்புகளை தெரிவித்தோம். நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தியுள்ளோம். சமூகநீதி கல்வி அரசியல் பற்றி எடுத்துரைத்தோம். ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டுக்கு நம்முடைய ஆதரவுகளை தெரிவித்தோம். துப்பாக்கிச் சூடு பாதிப்பால் மனம் உடைந்த மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தோம். பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினோம்

விக்கிரவாண்டி மாநாடு

விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை வெற்றி கொள்கை திருவிழாவாக மாற்றினோம். இரண்டு பெண்களை கொள்கை தலைவாராக ஏற்றுக் கொண்ட கட்சி தமிழக வெற்றி கழகம் தான். நாங்கள் யாருடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானவர்கள் அல்ல. பெரியாரின் கருத்துக்களை அதிகமாக ஏற்றுக் கொண்டோம்.

கொள்கை எதிரி அரசியல் எதிரி என்று ஓபனாக அறிவித்துள்ளோம். எல்லோரும் கட்சி தொடங்கிய பிறகு தான் ஒவ்வொரு வீட்டிற்கு செல்வார்கள். ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கு சென்ற பிறகுதான் நாங்கள் கட்சி தொடங்கியுள்ளோம். தமிழ்நாடு மக்களின் மனதிற்குள் செல்ல நாம் பட்ட பாடு நமக்கு தான் தெரியும்.

நடிகன் கட்சி என சிலர் நக்கல் நையாண்டி செய்தார்கள். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வென்றுள்ளோம். மக்கள் தெளிவாக புரிந்து கொண்டதாலும் கட்சி நிர்வாகிகள் முறையாக பணி செய்ததாலுல் 35 செய்த வாக்குகளை பெற்றுள்ளோம்.

தமிழக மக்களாலும் கூட்டணி கட்சி தலைவர்களாலும் இங்கு ஆளுங்கட்சியாக அமர்ந்துள்ளோம். இரண்டரை வருடத்தில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள் என கிண்டலாக பல பேர் கூறுகிறார்கள். இந்த இரண்டரை வருட காலத்தில் எவ்வளவு வலி வேதனை இருக்கிறது என்று எங்களுக்கு தான் தெரியும். மக்கள் சந்திப்பிற்கு அதிகமான இடர்பாடுகள் கொடுக்கப்பட்டது. அதிகமான கட்டுப்பாடுகள், மக்களை சந்திக்க அனுமதி கொடுக்காதது என பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தினார்கள். இன்னும் வெளியே சொல்ல முடியாத பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளது.

கரூர் சம்பவம்

கரூர் சம்பவத்தில் 41 நபர்கள் உயிரிழந்தது எப்படி சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய மனம் விட்டு அந்த வலியும் வேதனையும் எப்பொழுதும் நீங்காது. ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. அரசியல் என்றால் இப்படி எல்லாம் இருக்கணுமா என்னா?

அண்ணா அமைத்த சாமானியர்கள் ஆட்சி போல் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சாமானியர்களுக்கான ஆட்சி அமைத்துள்ளோம். வாகை சூடும் வரலாறு திரும்பி இருக்கிறது. மக்கள் தந்த வெற்றியால்தான் ஒரு மகத்தான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளோம். ஒரே ஒரு குடும்பம் தான் முக்கியம் என்று சொல்வது நம் ஆட்சி அதிகாரத்தில் இல்லை.

பல்வேறு திட்டங்கள்

2026 இல் யாராலும் மாற்ற முடியாத மதத்தை உடைத்தோம். காசு கொடுத்து ஓட்டு வாங்குற ஒரு நச்சு கலாச்சாரத்தை உடைத்துள்ளோம். ஒரு சுத்தமான அரசியலில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இது ஆரம்பம் தான் இந்த சபையில் இருந்து நான் கேட்டுக்கொள்கிறேன். கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்

கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு துறையில் இருக்கக்கூடிய ஓட்டைகளை அடைத்து வருகிறோம். நமக்கு எதிராக யார் யாரெல்லாம் ஒன்றாக சேர மாட்டார்களோ என்று நினைத்தோமோ அவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வருகிறார்கள். அவர்களை எல்லோரும் நம் மக்களை பார்த்து கொள்வார்கள்.

பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கியுள்ளோம். 200 யூனிட் வரை கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்கியுள்ளோம். போதை பொருள் ஒழிப்பிற்காக தனிப்படை அமைத்துள்ளோம். 700 மது கடைகளை மூடியுள்ளோம். வேலையில் இருந்தவர்களுக்கு வேறு கடைகளில் இடம் கொடுத்துள்ளோம். கவனிக்கப்படாத அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு கொள்ளைக்கு புள்ளி ஸ்டாப் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் புதிய 40 வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் புதுப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுள்ளப்பட்டுள்ளது. பல்வேறு புதிய திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக செயல்படும் கல்குவாரிகள் மணல் திருட்டுகளை தடுக்கப்பட்டுள்ளது. கனிமங்களை கொள்ளையடிக்கும் நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. லஞ்ச லாவண்யம் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். இது வெறும் சாம்பிள் தான் 40 நாட்களில் எவ்வளவு திட்டங்களை அறிவித்துள்ளோம் இனிவரும் காலங்களில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளோம்.

தொல்லையோ தொல்லை

வெள்ளை அறிக்கை வெளியிட்ட போது தலையை சுற்றுகிறது. அந்த காலத்தில் தான் பிள்ளையோ பிள்ளை தொல்லையோ தொல்லை என்று கூறினார்கள் ஆனால் கடந்த ஆட்சியை நினைத்துப் பார்த்தால் தொல்லையோ தொலையாக இருக்கிறது. ஆட்சி செய்ய தெரியாதவர்கள் நம்மளை ஆட்சி செய்ய தெரியாது என்று கூறுகிறார்கள்.

மக்கள் பணி செய்யும் அளவிற்கு மக்கள் பணத்தை திருட தெரியாது என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயர்த்தி ஊழல் செய்ய தெரியாது. பணியிட மாற்றம் பதவி உயர்வுக்கு பணம் வசூலிக்க எங்களுக்கு தெரியாது. புதிய பணியிடங்களை உருவாக்க தெரியுமே, தவிர அந்த பணியிடங்களுக்கு பணம் வசூலிக்க தெரியாது. கோயில் நிலையங்களில் சமூக சீர்கெட்டை சீர் செய்ய தெரியுமே தவிர கோயில்களில் திருட தெரியாது.

கனிம வளத்தை பாதுகாக்க தெரிந்த அளவிற்கு கனிம வளங்களை கொள்ளையடிக்க தெரியாது. ஓசி பஸ் என எங்களுக்கு விமர்சனம் செய்ய தெரியாது. எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்பவர்கள் நாங்கள் சொல்கிறோம். இது அனைத்தும் எங்களுக்கு தெரியாது தான். இந்த ஊழல்கள் எங்களுக்கு கடைசி வரை தெரியாமல் போகட்டும். அதனால் நாங்களும் எங்களுடைய மக்களும் வெரி வெரி ஹாப்பி தான்.

மின் வெட்டு

பல்வேறு சூழ்ச்சிகளால் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது அதனை சரி செய்ய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மக்களுக்கான ஆட்சி தான் இது என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். விவசாயிகளுக்கு பக்கபலமாக இந்த அரசு இருக்கும். ஒன்றிய அரசிற்கு எதிராக நிற்பவர்கள் தான் நாம்.

நமக்கு தமிழகத்தின் வளர்ச்சி தான் எப்பொழுது முக்கியம். தமிழக மக்களின் வளர்ச்சி திட்டங்களை எப்பொழுதும் எதிர்த்து நிற்க மாட்டோம், உறுதுணையாக தான் இருப்போம். தமிழ் தாய் வாழ்த்து தான் முதலில் பாட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு அழுத்தமாக தெரிவித்துள்ளோம். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து இந்த அரசு வலியுறுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.