GOLD RATE | தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

கடந்த 19-ஆம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.3,040-ம், கிராமுக்கு ரூ.380-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,570-க்கும் விற்கப்பட்டது.

வாரத்தின் முதல் நாளான நேற்று, தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி காணப்பட்டது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,560-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,000 குறைந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.