முக்கியச் செய்திகள் சினிமா

பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே “ஜெய் பீம்” – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ஜெய் பீம் படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினையே அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ படத்தினை எடுத்திருக்கிறார்கள்.

“சட்டம் – அது வலியவனைக் கண்டால் வளைந்து கொடுக்கும். எளியவனைக் கண்டால் எட்டி உதைக்கும் இது சிறுத்தைகளின் அரசியல் முழக்கம். காலம் காலமாய் வஞ்சிக்கப்படும் வதைக்கப்படும் பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே ’ஜெய் பீம்’. இது அரச பயங்கரவாதத்தின் பேரவலம்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இதற்கு முன் படம் படத்தை பார்த்த முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலஙள் ‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை

Gayathri Venkatesan

அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்து!

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்கக் குழு அமைப்பு!

Halley karthi