ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த 2 நிலநடுக்கங்கள் நேரிட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே புகுஷிமா கடற்கரைப் பகுதியை மையமாக் கொண்டு அந்நாட்டு நேரப்படி இரவு 11 மணி 36 நிமிடத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் முறையே 7 புள்ளி 1 மற்றும் 7 புள்ளி 3-ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியது. நிலநடுக்கம் நேரிட்டபோது டோக்கியோ நகரில் வீடுகள் குலுங்கியதை அடுத்து, வீடுகளில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கதத்தை அடுத்து 20 லட்சம் வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் காரணமாக, ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் ஒரு மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் எழலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், 94 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுகத்தால் கிழக்கு ஜப்பான் பகுதியில் பல்வேறு சிறிய குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. ஆனாலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு அணு உலைகள் எதுவும் இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.








