ஜப்பான் தலைநகர் டோக்கியோ நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை டூட்டி சந்த்துக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்டப்பந்தைப் போட்டிகளில் டூட்டி சந்த் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.
டூட்டி சந்த் தினமும் 6 முதல் 7 மணிநேரம் தடகள பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தேர்வுச் செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய டூட்டி,“டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் நான் தேர்வுச் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டேன். தற்போதும் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பங்குபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
இதனையடுத்து அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தைய பிரிவில் கலந்துகொள்கிறார். உலக தரவரிசை பட்டியலில் டியூட்டி சந்த் 100 மீட்டர் பிரிவில் 44-வது இடத்திலும் 200 மீட்டர் பிரிவில் 51-வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







