இந்திய கோல்ப் விளையாட்டு வீரர் உதயன் மனே டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ளார்.
உலகளவில் கோல்ப் விளையாட்டில் முதல் 60 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியின் தகுதிச் சுற்று விளையாட்டில் பங்குபெறமுடியும்.
இந்நிலையில் 74 புள்ளிகள் பெற்று அர்ஜெண்டினாவைச் சேர்ந்த வீரர் Emiliano grillo ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதன்காரணமாக இந்திய வீரர் உதயன் மனேவிற்கு ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் கோல்ப் விளையாட்டில் முன்னணி வீரராக உதயன் மனே உள்ளார். இதுகுறித்து பேசிய உதயன் மனே, “ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் இடம்பெற்றிருப்பது பெருமையாக உள்ளது. இதற்கான அறிவிப்பு முறையாக இன்னும் சில நாட்களில் வரும் என நினைக்கிறேன்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக் காலமாக என்னால் எந்த போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. இதனால் என்னுடைய தரவரிசை பட்டியலில் பின்னுக்குச் செல்லவேண்டியதாக இருந்தது. ஆனால் போட்டிகள் இல்லை என்றால் தொடர் பயிற்சியில் ஈடுபட்டேன்” என்றார்.
இதனையெடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கோல்ப் பிரிவில் இந்தியாவின் சார்பில் Anirban Lahiri, உதயன் மனே உள்ளிட்ட 2 ஆண்களும், பெண்கள் பிரிவில் Tvesa Malik இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







