2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும்.
தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கப்படும்.
எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு காமராஜர் விருது, கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு பாரதியார் விருது வழங்கப்படும்.
கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படும்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு வழங்கப்படும்.
கி.ஆ.பெ. விசுவநாதன் விருது சு.செல்லப்பாவுக்கும், விடுதலை விரும்பிக்கு கலைஞர் விருதும் வழங்கப்படும்.
அய்யன் திருவள்ளுவர் விருது சத்தியவேல் முருகனாருக்கும், அம்பேத்கர் விருது விசிக எம்.எல்.ஏ. சிந்தனை செல்வனுக்கும் வழங்கப்படும்.
விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரும் 16ம் தேதி அன்று 5 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.







