தமிழகத்தில் தரமான கல்வி இல்லாததால் நீட் தேர்வில் வெற்றியடைய முடியவில்லை -அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் தரமான கல்வி இல்லாத காரணத்தால் நீட் தேர்வில் வெற்றியடைய முடியவில்லை என மதுரையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  மதுரை தெப்பக்குளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற…

தமிழகத்தில் தரமான கல்வி இல்லாத காரணத்தால் நீட் தேர்வில் வெற்றியடைய
முடியவில்லை என மதுரையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மதுரை தெப்பக்குளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ்
பேசுகையில் “34 ஆண்டுகளாக மக்கள் பிரச்சினைக்காக பாட்டாளி மக்கள் கட்சி போராடி
வருகிறது என்றார்.

மேலும், சமூக நீதிக்கு எடுத்துக் காட்டான தலைவராக இராமதாஸ் செயல்பட்டு
வருகிறார். ராமதாஸ் தமிழக பிரச்சினை மட்டுமல்லாமல் அகில இந்திய
பிரச்சினைகளில் தலையீட்டு தீர்வு கண்டு உள்ளார். 55 ஆண்டுகளின் திராவிட
ஆட்சியில் மக்கள் சேர்வு அடைந்து விட்டார்கள் என கூறினார்.

அத்துடன், தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். 2026 ல் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும். பாமகவின் இலக்கு தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வது மட்டுமே. தமிழகத்தை வளப்படுத்த பாமக ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், பாமகவினர் நம்பிக்கையிடம் இருக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40
தொகுதிகளிலும் பாமகவை வலுப்படுத்தி வருகிறோம். 2 மாதங்களில் பாமக பலமான
கட்சியாக உருவெடுக்கும், மக்கள் மிக தெளிவாக உள்ளனர். எது உண்மை, எது போலி என
மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர் என அவர் கூறினார்.

தமிழகத்தில் பாமகவிற்கு தற்போது நல்ல அரசியல் களம் உள்ளது. தமிழகத்தில் தரமான கல்வி இல்லாத காரணத்தால் நீட் தேர்வில் வெற்றியடைய முடியவில்லை. 2026 ல் பாமக அரசியல் வியூகம் வேறு மாதிரி இருக்கும். 2026 ல் பாமக தலைமையில் கூட்டணி கட்சியுடன் தேர்தலை சந்திப்போம்.  2026 சட்டமன்ற தேர்தலின் முன்னோட்டம் தான் 2024 நாடாளுமன்ற தேர்தல், அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தில் கொள்ளை அடித்துள்ளது” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.