தமிழ்நாட்டில் தொடர் மழையால் இளநீர் வியாபாரம் கடும் சரிவு!

தமிழ்நாட்டில் தொடர் மழையினால்  இளநீர் வியாபாரம் கடும் சரிவடைந்துள்ளதாக  வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்விளநீர் அறுவடைப்பணி தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இளநீர் வியாபாரிகளிடம்…

தமிழ்நாட்டில் தொடர் மழையினால்  இளநீர் வியாபாரம் கடும் சரிவடைந்துள்ளதாக  வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்
செவ்விளநீர் அறுவடைப்பணி தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இளநீர் வியாபாரிகளிடம் கேட்ட பொழுது கடந்த பத்து நாட்களாக  வட தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இளநீர் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக என்று வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

தற்பொழுது வெட்டக்கூடிய இளநீர் சென்னை,  திருச்சி,  பெங்களூர்,  கேரளா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.  மேலும் வியாபாரிகள் கூறுகையில் இளநீர்க்கு போதுமான விலை இல்லாத காரணத்தினால் இந்த இரண்டு மாதங்களில் தங்களுக்கு பெரியளவில் லாபம் இல்லை,  நஷ்டம் தான் என தெரிவித்தனர்.

இருப்பினும் தங்களது வாழ்வாதாரத்திற்காக தற்பொழுது அறுவடை பணி செய்து
வருகிறோம்.  ஒரு இளநீர் 18 இருந்து 20 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்படுவதால்
தங்களுக்கு பெரும் நஷ்டம் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  தமிழ்நாடு அரசு இதனை கருத்தில் கொண்டு இளநீர் கொள்முதல் விலையை உயர்த்தி வியாபாரிகளின் வாழ்வாதரத்திற்க்கு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.