மது போதையில் தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்!

கோவை விளாங்குறிச்சி சாலையில் நேற்று இரவு சாலையோர தள்ளுவண்டி கடையின் மீது அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. கோவை விளாங்குறிச்சி சாலையில் நேற்று இரவு தனியார் கல்லூரி மாணவர்கள் 6…

கோவை விளாங்குறிச்சி சாலையில் நேற்று இரவு சாலையோர தள்ளுவண்டி கடையின் மீது அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

கோவை விளாங்குறிச்சி சாலையில் நேற்று இரவு தனியார் கல்லூரி மாணவர்கள் 6 பேர் மது போதையில் சொகுசு காரை இயக்கி வந்து சாலைக்கு எதிர்ப்புறம் உள்ள தள்ளுவண்டி உணவு கடையில் மோதியுள்ளனர்.  கார் மோதியதில் அங்கு  உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் வேகமாக வந்த சொகுசுக்கார் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றதில் மின் கம்பம் முழுமையாக சேதம் அடைந்தது.  மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி உணவகம் ஒன்றும் முழுமையாக சேதம் அடைந்தது.  அருகில் நின்ற இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.  இச்சம்பவம் குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆறு பேரில் மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில்,  மீதமுள்ள மூன்று பேரை காவல்துறையினர்
அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.