பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்னும் சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று உதகை ஏடிசி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நயினார் நாகேந்திரன்,
”ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஊட்டி ஒரு அழகிய நகரமாக இருந்தது. மிகப்பெரிய ஒரு இயற்கை நிறைந்த மாவட்டமாக இருந்தது. ஆனால் தற்போது குண்டும், குழியுமாகவும், பேருந்து வசதிகள் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போல் 356 இந்திய அரசமைப்பு சட்ட பிரிவின்படி இந்த ஆட்சியை கலைக்கலாம். ஆனால் ஆட்சியை கலைக்கக்கூடிய அவசியம் நமக்கு கிடையாது. தானாகவே ஆட்சி கலைந்து விடும். அதற்கான நேரம் நெருங்கிவிட்டது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் பகல் 12 மணிக்கு வருவதாக கூறி இரவு 7 மணிக்கு வந்தது அவர் மீது தவறு இல்லை என்று சொல்ல முடியாது. மைக் எடுத்தவுடன் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பேசி விடுகிறார். பாடி முடித்த உடனே விளக்குகளை அனைத்து அவர் மீது செருப்பை வீசுகின்றனர். காவல்துறை அங்கு லத்தி சார்ஜ் செய்கிறது. அடுத்த ஐந்து நிமிடத்திலேயே தமிழக முதலமைச்சர் அங்கே வருகிறார் இரவோடு இரவாக இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து அங்கு சென்று ஒரு நிமிடம் கூட எட்டி பார்க்கவில்லை. ஆனால் 10 லட்சம் ரூபாய் இறந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை இரும்புக்கரம் இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என கூறினார் ஆனால் தற்போது பள்ளி வளாகம் முன்பு போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது. ஸ்டாலினின் இரும்பு கரம் துரு பிடித்து விட்டதா…?
ஆட்சி அல்ல வெறும் காட்சிதான் நடக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மின் கட்டணம் பார்த்து சாக் அடிப்பது போல் இருப்பதாக தெரிவித்தார் ஆனால் தற்போதைய இவருடைய ஆட்சியில் மின்கட்டணத்தின் பில்லை தொட்டாலே ஷாக் அடிக்குது
திருப்பரங்குன்றத்தில் பூரணச்சந்திரன் உயிரை மாய்த்துக் கொண்டதற்கு முதலமைச்சர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். 2026 தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும். அதற்காக நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து கூறுவதில்லை உண்மையான மத சார்பின்மையை யார் கடைபிடிக்கின்றனர்…? என கேள்வி எழுப்பினர்.
இன்னும் 90 நாட்களே உள்ளது. மக்கள் ஒன்று சேர்ந்தால் இந்த ஆட்சி தூக்கி எறியப்படும்” என பேசினார்.







