கொரோனா தொற்றிலிருந்து மீண்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. இதனால் இந்திய அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணளன நியமனம் செய்து பிசிசிஐ நியமித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் டிராவிட்டுக்கு கொரோனா நெகடிவ் வந்தவுடன் அவர் மீண்டும் அணியில் பயிற்சியாளராக இணைவார் எனவும் அறிவித்திருந்தது. ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் நாளான இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா – பாகிஸ்தான் இடையான ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் ஆசிய கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய அணியுடன் தலைமை பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
டிராவிட் துபாய் சென்றடைந்துவிட்டதாகவும், அவர் பயிற்சி பணிகளை மேற்கொள்வார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் திரும்பியுள்ளது வீரர்கள் இடையே புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.