‘என் மானசீக குரு இயக்குநர் செல்வராகவன்’ – இயக்குநர் மோகன் ஜி

தன்ன்னுடைய மானசீக குரு இயக்குநர் செல்வராகவன் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜி இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘என் மானசீக குரு இயக்குநர் செல்வராகவன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.…

தன்ன்னுடைய மானசீக குரு இயக்குநர் செல்வராகவன் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மோகன் ஜி இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘என் மானசீக குரு இயக்குநர் செல்வராகவன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இயக்குநர் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் பார்த்த பின் தான் சினிமா மீது தனக்கு மோகம் ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ள அவர், யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குநர் ஆனாலும், இயக்குநர் செல்வராகவனை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய முதல் படமான பழைய வண்ணாரப்பேட்டை பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமார் இவருடைய தாக்கம் தான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பின் திரெளபதி படத்திலிருந்து தனக்கென ஒரு பாணியைத் தேர்வு செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும், குருவாக ஏற்றுக் கொண்டவரையே தன் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை, அவருடன் பகாசூரன் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘மநீம கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காகச் சுற்றுப்பயணம் – கமல்ஹாசன்’

இயக்குநர் செல்வராகவனை ரசித்து ரசித்து இயக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், நடிகராக மட்டுமே இருந்தாரே தவிர ஒரு நொடி கூட தன்னை இயக்குநராகக் காட்டிக் கொள்ளவில்லை எனவும், சின்ன கருத்துக் கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்துத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நடிப்பைப் பற்றித் தான் சொல்வதை விட நீங்களே சற்று நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர்,

குருவாக, அண்ணனாக தன் மீது உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு பகாசூரன் படத்தின் கதைக்காக இதில் நடித்த இயக்குநர் செல்வராகவனுக்கு இந்த நேரத்தில் தன்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், செல்வராகவனுக்கு இருக்கும் கோடிக் கணக்கான ரசிகர்களில் தானும் ஒருவன். அவருக்கு தன்னுடைய அன்பளிப்பு இந்த பகாசூரன் திரைப்படம், காத்திருந்து பாருங்கள் எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.