பூனை ஒன்று, அதனை வளர்ப்பவர்களின் கையைத் தலையணையாகப் பயன்படுத்துகிறது. அதனிடம் இருந்து அவர்கள் நகர முயலும் போது அந்த பூனை மிகவும் வருத்தமடைகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பூனைக்கும், நாய்க்கும் பெரும்பாலும் ஒத்துப்போகாது . அதுபோல தான் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் மனநிலையும். நாய் வளர்க்க பிடிக்காதவர்களின் முதல் சாய்ஸ் பூனையாகத்தான் இருக்கும். பொதுவாக பூனைகள் சாதுவான பிராணிகள். உரிமையாளரைச் சார்ந்தே வாழும். குழந்தைகளுடன் விளையாடுவது, வளர்ப்பவர்களுடன் நெருக்கமாக பழகுவது ஆகியன பூனைகளின் குணம்.மேலும் பூனை வளர்ப்பால் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மற்றும் மன அழுத்தம் நீங்கும் என ஆய்வுகள் கூறுகிறது.
அது உண்மைதானோ என்னவோ.. இங்கு பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வரும் ஒருவரின் வீட்டில் பூனை ஒன்று, அதனை வளர்ப்பவர்களின் கையை தலையணையாகப் பயன்படுத்தி, அதில் தனது தலையை வைத்து தூக்குவதற்கு முயல்கிறது. அப்போது பூனையின் செல்லப்பெற்றோர், அதனிடம் இருந்து, நகர முயலும் போது அந்த பூனை மிகவும் கோபமடைந்து வருத்தமடைகிறது. அப்போது தன்னை வளர்ப்பவர்களை பார்த்து திட்டுவது போல் சத்தமாக மியாவ் செய்வதன் மூலம் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவது போன்றும், இறுதியில் பூனையின் கோரிக்கைக்கு, அந்த செல்லப்பெற்றோர் அடிபணிவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இதனை வீடியோவாக பதிவு செய்த, பூனையின் செல்லப்பெற்றோர், அதனை “‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என் தலையணையை எடுத்துவிடாதே!’’ என்று பூனை சொல்வதுபோல் தலைப்பிட்டு ரெடிட்டின் ‘அவ்வா’ (Reddit/@’aww) என்ற சமூக வலைதளத்தில் வெளியிட்டு பகிரந்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்க்கும் போது வேடிக்கையாகவும், அதே வேளையில் வருத்தத்தில் இருப்பவர்கள் தங்களது கவலையை மறந்து சிறக்க வைக்கும்படியாகவும் உள்ளது. சுமார் 16 மணிநேரத்திற்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ 800 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ந்த பூனை பிரியர்கள் பலர் “கிட்டியின் உணர்ச்சிபூர்வமான இந்த வீடியோவை பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. “கிட்டியை புண்படுத்தாதீர்கள்! லொல்,” போன்ற பல உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









