“தொந்தரவு செய்யாதீர்கள்” – விராட் கோலி, அனுஷ்கா சர்மா வேண்டுகோள்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நாளை முதல்…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நாளை முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது.

தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. அதே போல போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்து, “உங்களின் குறுஞ்செய்திக்கு பதில் வரவில்லை என்றால் என்னிடம் உதவி கேட்காதீர்கள்” என்று விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.