செல்லப்பிராணி ”நூரியை” தனது தாய் சோனியா காந்திக்கு ராகுல் காந்தி பரிசளித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வருடம் இந்திய ஒற்றுமைப் பயணம் எனும் நடைப்பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர் பயணம் செய்து வருகிறார்.சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாபுக்கு ராகுல் காந்தி சென்றார்.

இந்த சந்திப்பின்போது ஓட்டுநர்கள், உணவு விநியோகிக்கும் ஊழியர்கள், விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளிகள், வியாபாரிகள் எனப் பல்வேறு தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை ராகுல் காந்தி கேட்டறிந்து வருகிறார்.
பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள உணவுக் கூடத்தில் பக்தர்கள் உபயோகித்த தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக பொற்கோயிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து பல்லக்குத் தூக்கும் நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவு செய்துள்ளது. அந்த காணொலியில் மூத்த காங்கிரஸ் தலைவரும் சோனியா காந்திக்கு அவரது மகனான ராகுல் காந்தி பரிசு ஒன்றை கொடுக்கும் விதமாக உள்ளது. அந்த பரிசின் மூலம் தங்களது குடும்பத்தின் புதிய உறுப்பினரான நூரியை தனது தாய்க்கு ராகுல் காந்தி அறிமுகப்படுத்துகிறார் என்று பதிவிடப்பட்டுள்ளது.
சர்வதேச விலங்குகள் தினத்தை முன்னிட்டு தனது தாய்க்கு ராகுல் காந்தி நூரி எனும் நாய்க்குட்டியை பரிசாக வழங்கியுள்ளார்.







