முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

நாய்கள் விஷம் வைத்து கொலை – அடுத்தடுத்து அரங்கேறும் கொடூர சம்பவங்கள்.!

மதுரையில் தெரு நாய்க்குட்டிகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கடந்த திங்கள்கிழமை, கேரள மாநிலம் ஆதிமலத்துராவில் நாய் ஒன்றை கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட வீடியோ நெஞ்சை பதறவைக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில் வாயில்லா ஜீவன்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை அதிகரித்துள்ளது.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் நேற்று மூன்று குட்டிகள் மற்றும் தாய் என நான்கு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு நாய்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுமார் 21 நாய்கள் விஷம் வைத்தும் அடித்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருவதாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக மதுரை ஊமச்சிகுளம்,கூடல்புதூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு விஷம் வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!

Ezhilarasan

”வரும் தேர்தலில் தாயில்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது”- அமைச்சர் செல்லூர் ராஜூ!

Jayapriya

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி

Vandhana