கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘தமிழகத்தில் முதல்கட்டமாக 6 லட்சம்…

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘தமிழகத்தில் முதல்கட்டமாக 6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு முன்பதிவு செய்யப்பட்டதாகவும், கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எவ்வித அச்சமும் இன்றி அனைவரும் கோவிட் தடுப்பூசி போட வேண்டும் எனவும், தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார். கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply