காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் பினராயி விஜயன் எரிபொருள் இல்லாமல் காரை ஓட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் ரப்பர், மிளகு போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.







