சளி பிரச்னைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடி ஊசி.! அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் பணியிடை நீக்கம்….

கடலூர் அரசு மருத்துவமனையில் சளிப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கருணாகரன் என்ற கூலித் தொழிலாளி எட்டாம் வகுப்பு படிக்கும்…

கடலூர் அரசு மருத்துவமனையில் சளிப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கருணாகரன் என்ற கூலித் தொழிலாளி எட்டாம் வகுப்பு படிக்கும் தனது மகள் சாதனாவை சளிப் பிரச்சனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு ஊசி மற்றும் மாத்திரைகளை எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் செவிலியர்களோ மருத்துவர் எழுதிக் கொடுத்த சீட்டை வாங்கிப் பார்க்காமலேயே சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசியை போட்டுள்ளனர். இதைக் கண்டு திடுக்கிட்டுப் போன கருணாகரன், என்ன ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நாய்க்கடிக்கு இரண்டு ஊசிகள் தானே போடுவார்கள் என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

உடனே கருணாகரன் சளிப் பிரச்சனைக்கு வந்ததாக சொன்னதும், தெரியாமல் நடந்து விட்டதாக கூறி செவிலியர்கள் தவறை மூடி மறைக்க முயன்றுள்ளனர். அதே நேரத்தில் சிறுமி மயங்கி விழுந்ததும், அவருக்கு உள்நோயாளிகள் பிரிவில் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டடது. பணியில் அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.