தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவ்தாஸ் மீனா கடந்து வந்த பாதை குறித்து விரிவாகக் காணலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா, 1989ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று காஞ்சிபுரம் துணை ஆட்சியராக (பயிற்சி) தமது பணியை தொடங்கினார். தொடர்ந்து 1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை கோவில்பட்டி துணை ஆட்சியராகவும் சிவ்தாஸ் மீனா பணியாற்றியுள்ளார். 1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையில் வேலூர், கோவை மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியர் அந்தஸ்தில் ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் நிர்வாக செயலாளராக பணியாற்றியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1998-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை நிர்வாக இயக்குநராக இருந்த சிவ்தாஸ் மீனா, நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். நாகப்பட்டினம் ஆட்சியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 2001-ம் ஆண்டு பதிவுத்துறையின் கூடுதல் பதிவாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் 49வது தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்!!
சென்னை குடிநீர் வாரியத்தின் இயக்குனர், உணவுத்துறை, உயர்கல்வித்துறை, வணிகவரித்துறை இணை ஆணையராகவும் சிவ்தாஸ் மீனா பணியாற்றியுள்ளார். 2015-ம் ஆண்டு கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் முதன்மைச் செயலாளாரக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டார்.2017-ம் ஆண்டு மத்திய அரசுப்பணிக்கு மாற்றப்பட்ட சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதித்துறை கூடுதல் செயலாளராகவும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் சிவ்தாஸ் மீனா பணியாற்றியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தமிழ்நாட்டு பணிக்கு சிவ்தாஸ் மீனா அழைத்து வரப்பட்டார். 10 கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். இறையன்புவிற்கு பிறகு தலைமைச் செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ள சிவ்தாஸ் மீனாவின் பதவிக்காலம் வரும் 2025-ம் ஆண்டு அக்டோபர் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.