300 மீட்டர் தூரத்திற்கு காரினை தள்ளிச்சென்ற லாரி… கோபி அருகே விபத்து…!

கோபியிலிந்து கவுந்தப்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது லாரி மோதி 300 மீட்டர் தூரத்திற்கு காரை இழுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபியை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது…

கோபியிலிந்து கவுந்தப்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது லாரி மோதி 300 மீட்டர் தூரத்திற்கு காரை இழுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபியை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது தாயார் மற்றும் மனைவி உள்ளிட்ட ஐந்து பேர் கோபியிலிருந்து கவுந்தப்பாடி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிர்புறத்தில் பங்களாபுதூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவர் வேகமாக லாரியை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் லாரியை ஓட்டி வந்த மாதேஸ் குடிபோதையில் இருந்ததால் எதிரே வந்த கார் மீது தனது லாரி மோதியது தெரியாமல் தொடர்ந்து லாரியை நிறுத்தாமல் ஓட்டியவாறே சென்றுள்ளார். அப்போது லாரியின் முன்பகுதியில் சிக்கிய கார் தள்ளப்பட்டு சுமார் 300 மீட்டர் வரை சென்றுகொண்டே இருந்தது. அப்போது காரில் பயணித்த ஐந்துபேரும் அதிர்ச்சியில் சத்தமிட்டு தங்களை காப்பாற்றுமாறு குரல் எழுப்பியுள்ளனர்.

ஆனால் லாரியை ஓட்டிய மாதேஸ் தொடர்ந்து லாரியை ஓட்டியவாறே சென்றுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் சத்தமிட்டவாறு லாரி பின் தொடர்ந்து ஓட்டுநரிடம் லாரியை நிறுத்துமாறு சத்தமிட்டபின் ஒட்டுநர் லாரியை நிறுத்தினார்.

லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருப்பதையறிந்த பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் காரில் பயணித்த ஐந்து பேரும் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மாதேஸ் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் கோபி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.