“பராமரிப்பு இல்லாத கோயில்களை தான் சுத்தம் செய்ய வேண்டுமா? – நடிகை குஷ்பு கேள்வி

பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயிலை தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த கோயிலாக இருந்தாலும் அதை சுத்தம் செய்யலாம் என பாஜகவை சேர்ந்தவரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு…

பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயிலை தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த கோயிலாக இருந்தாலும் அதை சுத்தம் செய்யலாம் என பாஜகவை சேர்ந்தவரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் குஷ்பு தலைமையில் பாஜகவினர் இன்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.  இதனை அடுத்து குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குஷ்பு பேசியதாவது:

பிரதமர் மோடி கோயிலை சுத்தமாக வைக்க வேண்டும் என்று முன்னெடுத்தார்.  நாம் அனைவரும் கோயிலை சுத்தமாக வைக்க வேண்டும்.  பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயிலைதான் சுத்தம் செய்ய வேண்டும் என்று இல்லை.  எந்த கோயிலாக இருந்தாலும் அதை சுத்தம் செய்ய வேண்டும்.  பிரதமரை சந்திக்க வேண்டும் என்று 92 வயதுடைய என்னுடைய அத்தை ஆவல் கொண்டிருந்தார்.  நேற்று பிரதமரையும் சந்தித்தார். பெரியவர்கள் ஆசிர்வாததில் தான் பிரதமர் உள்ளார்.

திமுக எம்.எல்.ஏ வீட்டில் ஒரு பெண்ணுக்கு அரங்கேறிய கொடுமை குறித்து முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  தேசிய மகளிர் ஆணையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் வருவது பீகார் மாநிலத்தில் தான்.  2024 இல் மிக பெரிய வெற்றி பாஜகவிற்கு காத்திருக்கிறது.  அதற்காக நாங்கள் உழைத்து வருகிறோம்.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.