எதிர்கட்சிகள் நாங்கள் விஜயை மிரட்டுவதாக கூட கூறலாம்… ஆனால் அவை பொய் – நயினார் நாகேந்திரன்!

வருகின்ற சட்டசபை தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் – தமிழக மக்களுக்குமான தேர்தல் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சமூக ஊடகங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆலோசனைகளை வழங்கினார். நிச்சயமாக வரும் தேர்தலில் மோசமான திமுக ஆட்சியை, தலைமை டிஜிபியை கூட நிரப்ப முடியாத ஆட்சி அகற்றப்படும்.

டெல்லிக்கும் – தமிழ்நாட்டுக்குமான தேர்தல் என்கிறார் முதலமைச்சர். ஆனால் குடும்ப ஆட்சிக்கும் – தமிழக மக்களுக்குமான தேர்தல் இது. 2 வயது சிறுமி கூட பாதுகாப்பாக இல்லை, இரத்த காயத்துடன் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். விளாத்திகுளம் சம்பவம் போல் நாள்தோறும் நடக்கிறது. ஆட்சியின் அவலங்கள் தினந்தோறும் வெளியாகிறது. கஞ்சாவுடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். விஜய் கூட்டணி குறித்து பேசுகிறாரா என கேட்கிறீர்கள், அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

எதிர்கட்சிகள் நாங்கள் விஜயை மிரட்டுவதாக கூட கூறலாம், ஆனால் அவை பொய். விஜய் வருவதில் விருப்பம் உள்ளதா என நான் கூற முடியாது. விஜய் ஒருநாள் முன்பே டெல்லி செல்கிறார் என கூறுகிறார். கரூர் சம்பவத்திற்குகாக செல்கிறார், வேறு விசயங்களுடன் தொடர்பு படுத்த கூடாது.

திமுகவிடம் பணமும், அதிகாரமும் இருக்கிறது. அதை வைத்து நெகடிவ் உருவாக்க பார்க்கின்றனர். திமுகவினர் பெட்ரோல் பங்களுக்கு அதிக இருசக்கர வாகனங்களை அனுப்பி செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். நிதிஷ் குமார் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். வரும் 17 தேதி அதிமுகவுடன் இணைந்து திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 17 ம் தேதிக்கு பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.