இந்தி மாநிலம் போதும் நினைக்கிறீரா அமித்ஷா? – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன் படுத்த வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். டில்லியில் 37வது பார்லி அலுவல் மொழி…

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன் படுத்த வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

டில்லியில் 37வது பார்லி அலுவல் மொழி குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை விகித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், அமித்ஷாவின் கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: “அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் செயல் .ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.

https://twitter.com/mkstalin/status/1512420104687869954

இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் நினைக்கிறாரா?. ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது!ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.