விஜயின் பீஸ்ட் படத்திற்கான மூன்றாவது பாடல் வெளியாகி இணையம் முழுவதும் வைரலாகத்தொடங்கியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் விஜய், பூஜா ஹெட்ஜே நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் வரும் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்திற்கான முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’இசையமைப்பாளர் அனிருத்தால் பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு பல படங்களை கடந்து பீஸ்ட்-இல் இடம்பெற்றுள்ளது. இதை அனிருத்தும், நெல்சனுமே அந்த பாடலின் டீஸரில் அதிரடியாக அம்பலப்படுத்தினார்கள். அதிலும் குறிப்பாக ‘பாடல் வரிகளின் வரிக்குதிரை’ என்று ரசிகர்களால் போற்றப்படும் சிவகார்த்திகேயனின் அரபு மொழி வரிகள் நடிகர் விஜயையே அதிர்ச்சிக்கும், ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கியதையும் அந்த வீடியோவில் பார்த்தோம். இதனைத்தொடர்ந்து வெளியான அரபிக் குத்து பாடலுக்கு விஜயின் வசீகரமான நடனங்கள் மேலும் அழகு சேர்க்க யூ-ட்யூப் views-கள் மில்லியன்களால் நிறைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து ஜாலியோ ஜிம்கான எனப்படும் அடுத்த single பாடலும் வெளியானது. காதல் பாட்டு என்றால் ‘ஆர்மோனியத்தை ‘Air’-லயே பறக்கவுட்டு அனிருத் வாசிப்பார்’ என்று நெல்சன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதற்கே அந்த பாடலில் அதகளம் செய்திருந்தார் அனிருத். அந்த பாடல் வேறு சில பாடல்களின் காப்பி ‘இதான் நாங்க கண்டுபுடிச்சது’ என்று துண்டு சீட்டோடு பலர் உலவிவந்தபோதிலும், அதையெல்லாம் கடந்து மக்களின் மனங்களில் ஜாலியாக ஜிம்கானா ஆடியது அப்பாடல். விஜயின் தாவி தாவி ஆடும் நடனங்கள் ‘ரீல்ஸ்’ முழுவதையும் ஆக்கிரமித்தன.
பீஸ்ட் சீரியஸான படம் என்று எதிர்பார்த்தால் பூ போட்ட கலர் சட்டையோடு பனி பிரதேசத்தில் ஜாலியாக நடனம் ஆடுகிறார்களே இந்த எந்தமாதிரியான படமாக இருக்கும் என குழம்பியவர்களுக்கு பீஸ்ட் ட்ரெய்லர் நல்ல விருந்தளித்தது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல், மாஸ்டரில் வரும் வாத்தி ரெய்டு போல, கதையுடன் வரும் பாடலாக இருக்கும் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் திரை தீ பிடிக்கும்..வெடி வெடிக்கும்.. ஒருத்தன் வந்தா படை நடுக்கும் எனத்தொடங்கும் ‘ Beast mode’ எனப்படும் மூன்றாவது பாடல் டெரராகவும், ஃபயராகவும் இணையத்தில் கொளுத்தியெடுக்கிறது