“திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ரூ.150 கோடி வருவாய் ஈட்டியுள்ள கோ-ஆப்டெக்ஸ்”

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் காந்தி பெருமிதம் தெரிவித்தார். சென்னை எழும்பூர் கோ ஆப்டெக்ஸ் திடலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு…

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் காந்தி பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் கோ ஆப்டெக்ஸ் திடலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் தேசிய கைத்தறி கண்காட்சியின் துவக்கவிழா நேற்று நடைபெற்றது. விழாவில், அமைச்சர்கள் காந்தி, மா.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர், அப்போது மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கைத்தறித்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகள், சிறந்த இரகத்திற்கான விருதுகள் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர்களுக்கான விருதுகள் என 69 விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய அமைச்சர் காந்தி, மத்திய அமைச்சகத்தின் ஜவுளி மற்றும் கைத்தறி வளர்ச்சி ஆணையம் சார்பில் 45 லட்ச ரூபாயும்,, மாநில அரசு நிதியாக 55 லட்சம் ரூபாயினை கொண்டு மொத்தம் 1 கோடி ரூபாய் செலவில் இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நிலவி வந்த குறைபாடுகளை சரிசெய்யப்பட்டதையடுத்து தற்போது வரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டப்பட்டு வருவதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.