குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

முதலமைச்சர் ஜோசப் விஜய், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.