சித்திரை திருவிழா கள்ளழகர் உண்டியலில் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

மதுரைக் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது, தற்காலிக உண்டியல்களில், பக்தர்கள் ரூ. 1 கோடியே 2 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். மதுரைக் கள்ளழகர் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், மலையில் இருந்து அழகர்…

மதுரைக் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது, தற்காலிக உண்டியல்களில், பக்தர்கள் ரூ. 1 கோடியே 2 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

மதுரைக் கள்ளழகர் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், மலையில் இருந்து அழகர் புறப்பட்டு, வண்டியூர் வரை சென்று, மீண்டும் மலைக்குத் திரும்பியது வரை, சுவாமி முன், 39 கோயில் உண்டியல்கள் மாட்டுவண்டிகள் மூலமாகவும், கோயில் பணியாளர்கள் மூலமாகவும் கொண்டு வரப்பட்டது.

இதில், பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைக்காக, காணிக்கைகளை ஆர்வத்தோடு செலுத்தினர். உண்டியல்கள் அனைத்தும் அதிகாரிகள் முன்பு திறக்கப்பட்டு, அவற்றை எண்ணும் பணி, கள்ளழகர் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ரூ. 1 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 952 ரூபாய் ரொக்கப் பணமும், 15 கிராம் தங்கம், 63 வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

உண்டியல் எண்ணும் பணியின் போது அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலின் துணை ஆணையர் மு.ராமசாமி, இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உதவி ஆணையர் கருணாகரன், மதுரை வடக்கு மண்டல இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கர்ணன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவிலின்
கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.