கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையபுரம், கயத்தார் பகுதியில் 80 பள்ளிகளில், 265 பள்ளி வாகனங்களில், 137 வாகனங்கள் வட்டார போக்குவரத்து…

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையபுரம், கயத்தார் பகுதியில் 80 பள்ளிகளில், 265 பள்ளி வாகனங்களில், 137 வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், வட்டாட்சியர் வசந்தமல்லிகா, கிழக்கு காவல் ஆய்வாளர் வன சுந்தர், தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தராஜ், போன்ற அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி வாகனங்களில் 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது.  பள்ளி வாகனத்தில் கதவு, அவசர வழி, முதலுதவி பெட்டி, நிறம், கண்காணிப்பு கேமரா, வேககட்டுபாட்டு கருவி போன்றவை முறையாக உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது.  ஆய்வின் போது சில் வாகனங்களில் குறைபாடு கண்டறியப்பட்டு உடனடியாக அதை சரி செய்து கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பள்ளி பேருந்துகளில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவுறுத்தினார்.
—–அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.