#GOAT படத்தில் நடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் படக்குழுவினர் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of…

The salary received by the film crew of Vijay starrer Code has been revealed.

விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் படக்குழுவினர் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (செப். 5) வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர். இப்படத்திற்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள்.

இதையும் படியுங்கள் : சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதலமைச்சர் #MKStalin! வைரலாகும் வீடியோ!

இந்நிலையில், கோட் திரைப்படத்தில் நடித்தவர்கள் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான ‘கோட்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் ரூ.200 கோடி சம்பளம் பெற்றிருந்ததை படத்தின் தயாரிப்பாளரே உறுதி செய்திருந்தார்.

இயக்குநர் வெங்கட் பிரபு ரூ.10 கோடியையும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரூ. 3 கோடியையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடிகர்களான பிரபுதேவா ரூ. 2 கோடி, பிரசாந்த் ரூ. 75 லட்சம், ஜெயராம் ரூ. 50 லட்சம், அஜ்மல் ரூ.50 லட்சம், மோகன் ரூ. 40 லட்சம் மற்றும் நடிகை ஸ்நேகா ரூ. 30 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர்கள் மீனாட்சி சௌத்ரி, லைலா, யோகிபாபு, வைபவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.