#Paralympics2024 | ஒரே நாளில் பதக்கங்களை வென்ற 5 பேர் – குவியும் பாராட்டுகள்!

பாரிஸ் பாராலிம்பிக்கில் ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த…

Prime Minister, Narendra Modi, congratulated, athletes , Paris Paralympics

பாரிஸ் பாராலிம்பிக்கில் ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் 3 வெண்கலம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர்.

  • அதன்படி நேற்று நடைபெற்ற போட்டிகளில், இந்தியர்கள் 5 பதக்கங்களை கைப்பற்றினர்.
  • மகளிருக்கான 400 மீட்டர் (டி20) போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
  • ஆடவருக்கான ஈட்டி எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்திய வீரர் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • அதேப் பிரிவில் மற்றொரு இந்திய வீரரான சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
  • ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் ஷரத் குமார் வெள்ளப்பதக்கம் வென்றார்.
  • மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

பாரிஸ் பாராலிம்பிக்கில் ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் தனித்தனியே வாழ்த்துப் பதிவுகள் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது ;

இதையும் படியுங்கள் : சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதலமைச்சர் #MKStalin! வைரலாகும் வீடியோ!

மாரியப்பன் தங்கவேலு

“ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்! தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது பாராட்டுதலுக்குரியது”

தீப்தி ஜீவன்ஜி

“பெண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள்! அவர் எண்ணற்ற மக்களின் உத்வேகமாக இருக்கிறார். அவருடைய திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது”

அஜீத் சிங்

“ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அஜீத் சிங்கின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.”

சுந்தர் சிங் குர்ஜார்

“ஆண்களுக்கான ஈட்டி எறிதலில்வெண்கலப்பதக்கத்தை வென்று வந்த சுந்தர் சிங் குர்ஜரின் அர்ப்பணிப்பும், உந்துதலும் சிறப்பானது. அவரின் சாதனைக்கு வாழ்த்துக்கள்!”

ஷரத் குமார்

“ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளி வென்றுள்ளார். விளையாட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டும் அவருக்கு பாராட்டுக்கள். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த நாட்டையும் ஊக்குவித்துள்ளார்.”

இவ்வாறு பிரதமர் மோடி அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.